பெறற்கரிய பெருந்தகை அப்பா
டப.. டப.. டப.. வண்டி,
தெருவில் போகுது எனக்கு வேணும்
என்றேன்..தெருவில் இறங்கினார்,
என் அப்பா.
மதுரைத் தெருவெங்கும் தேடினார்,
வண்டியை வாங்கியே திரும்பினார்;
டப.. டப..வண்டியோடு திரும்பினார்
என் அப்பா.
என் ஐந்து வயதில் பள்ளியில் சேர்த்து,
கல்வி கொடுத்து, தன் L I C பாலிசியை முடித்து
மருத்துவக் கல்லூரியில் சேர்த்தார்;
என் அப்பா.
சமூக அங்கீகாரம் பெற்றுத் தந்த அப்பா,
நான் பெறற்கரிய பெருந்தகை அப்பா; 'Control'
விலைக்கே ஊரார்க்கு நெல் கொடுத்து பெயர் பெற்ற
என் அப்பா.