ஒய்யாரக் கிழிசல் வெளி

வெளிச்சம் தருவதில்
தவம் பற்றும் நிலை
தவழ்கிறது...

எதுவுமற்ற புள்ளிக்குள்
வெயில் நிழல்
கூடாரம்...

ஒளி பிறழ்ந்த கோணத்தில்
ஒய்யாரக் கிழிசல்
வெளி...

தூசுக்கள் தூண்டிலிட
தூரங்கள் மினு மினுக்கும்
சம்பவ காலை...

பதுங்கி பிரிவதில்
பாதி தூரம் பளிச் பளிச்
பாதம்...

நிலையற்ற ஒளியே
பிதற்று நிலைத்
தேற்றம்...

பின் அந்தி சாயலிலும்
முன் நிற்கிறது
எதிர் நிறை வெளிச்சம்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (18-Feb-16, 4:23 pm)
பார்வை : 105

மேலே