தொலைத்து விட்டோம் சுதந்திரத்தை

பாரடா தோழா....
பாரில் நடக்கும் அதிசயத்தை....!

மனிதக் கூட்டமிங்கே
மல்லாந்து படுத்துறங்க.....
குள்ளநரிக் கூட்டமொன்று
நாட்டை ஆளுதடா...!!

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே.......
என்று பாடிச்சென்ற பெரியோர்ககளே....!

பாருங்கள் உங்கள் ஆனந்த சுதந்திரத்தை
அது அதிகார வர்க்கத்திற்க்கு
தலை சீவிக்கொண்டிருப்பதை....!!

ஆற்று மணலை தோண்ட தோண்ட
நீர் சுரக்கும் என்றான் வள்ளுவன்...

இங்கும் நீர் சுறந்துகொண்டுதான் இருக்கிறது
ஆற்று மணலிலல்ல...........

எம் ஏழை மக்களின் அடிவயிற்றில்
அளவுக்கதிகமாக.....!!

-ஏழைகளின் தோழன்

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (19-Feb-16, 7:01 pm)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
பார்வை : 230

மேலே