இயற்கையின் விசித்திரம்

குழந்தை பிறந்ததும் பார்க்க
எவ்வளவு அழகோ
அதுபோல்.....
நீ தோன்றும் போதும்
அத்தனைக் குளுமை...!
உன்னை பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்று தோன்றும்...!

குழந்தை பிறந்து, தவழ்ந்து
நடை பயில்வது போல்
நீ உதயமாகும் போது சிவப்பாகவும்
சிறிது நேரத்தில் ஆரஞ்சாகவும்
பின் மஞ்சளாகவும்
காட்சியளிக்கின்றாய்...!

குழந்தை வளர்ந்து
மனிதனானதும் அவர்களிடம்
எத்தனை குணங்கள் இருக்குமோ
அதுபோல்....
நீயும் உயரவரவர
உன் குணத்தை காண்பித்து
அனைவரையும் சுட்டெரிக்கின்றாய்....!

எத்தனை செயல்கள் செய்தாலும்
இறுதியில் முதுமை அடைந்ததும்
இன்பம் காண்கிறான் மனிதன்...
அதுபோல்....
மாலை வந்ததும்
கிழக்கே தோன்றிய நீ
மேற்கே மறையும் போது
கண்களுக்கு இனிமையாய்
காட்சியளிக்கின்றாய்....!

கடைசியில் மனிதன்
இறந்து முக்தி அடைகின்றான்...!
அது போல் நீயும்
மேற்கே மறைந்து முக்தி பெறுகிறாய்.....!

மறுபடியும் ஜெனனம்
எடுத்து தோன்றும்
புதிய உயிர் போல்
நீயும் மறுஜென்மம் எடுத்து
சந்திரனாய் காட்சியளிக்கின்றாய்...!

மனிதன் இத்தனை
நிலைகளையும் அடைய
எத்தனையோ வருடங்கள்
ஆகின்றன...!
ஆனால் நீயோ
ஒரு நாளில் அனைத்தையும்
அடைந்து விடுகிறாயே...!

இயற்கையின் படைப்பே
விசித்திரம் நிறைந்தது தான்....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (19-Feb-16, 11:37 pm)
பார்வை : 270

மேலே