மரபணு விதை

விவசாயத்திலே விஞ்ஞானம் ;
விதைகளெல்லாம் வீதியிலே !
விலை மலிவாய் கிடைக்குது;
விற்பனையும் பெருகுது !

மாற்றம் ஒன்று வருகுது ;
மனதினிலே பதியுது !
மரபணு பூதமாய் ;
மாற்றத்தை தருகுது !

பன்னாட்டுக் கம்பனிகள் ;
பல்லிளித்து வருகுது !
பாழாய்ப்போன விவசாயிகள் ;
பட்டினியில் வாடுதே !

சுற்றுச்சூழல் எல்லாமே ;
சுடுகாடாய் மாறுது !
சுய புத்தி இல்லாமல் ;
சுருக்கு கயிறே தெரியுது !

எழுதியவர் : hajamohinudeen (20-Feb-16, 2:23 pm)
பார்வை : 115

மேலே