கடலை மிட்டாய்
ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,
5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான்.
கடைக்காரர் அலமாரியின் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் பாட்டிலை மிக சிரமப்பட்டு அலமாரி மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.
10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.
கடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு பாட்டில வைத்து விட்டார்.
மீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காரருக்கு முடியல........
எடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் பாட்டிலை கீழே வைதுக்கொண்டார்.
அவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா? என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.
அப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், என்ற நிம்மதியுடன், மிட்டாய் பாட்டிலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான்,
10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்...