காதலால் கவிஞனானவர்கள்
எனது கவிதைகளில்...
சந்திப் பிழைகள் முந்தி நிற்கும்
மயங்கொலி பிழைகள் சங்கொலி ஒலிக்கும்
மரபு பிழைகளும் மறைந்திருக்கும்
வழுவுச் சொற்கள் வலுவாய் இருக்கும்
எதுகை மோனை எனக்கு சுத்தம்
இலக்கண பிழையோ இல்லாதிருந்தால் அதிசயம்
சொற் குற்றங்கள் சொல்லி சிரிக்கும்
பொருட் குற்றங்கள் பொதிந்திருக்கும்
பிறமொழிச் சொற்களும் பிணைந்து கிடக்கும்
தமிழ் வார்த்தைகளோ தப்பாகி முறைக்கும்
ஆமாம்...
நான் ஒரு கவிஞன்
இப்படியாக என் போல எத்தனை பேரோ
"காதலால் கவிஞனானவர்கள்"