என்னுள் நுழைந்தவள்

என்னில் ஏதோ ஒன்றை தொலைத்த நேரம் என்னுள் நுழைந்தவள்!!!
நான் விழித்த நேரம் என்னில் முற்றிலும் பரவியிருந்தாள்!!!
இழுத்தெறிந்தேன்!!!
என் இதயம் கிழித்தாள்!!!
அறுக்க எண்ணினால், என்னை துளைத்துக் கொண்டிருந்தாள்!!!
கதறி அழுதேன்!!!
ஆனால் அவள் அழகாய் சிரித்தாள்!!!
ஓடிச்சென்றால் என் கால்கள் கட்டிக்கொண்டாள்!!!
தவழ நினைத்தால் என் நிழலலையும் நெருங்கவிட மறுத்தாள்!!!
வழியின்றி மயங்கி விழுந்தேன்!!!
தாவித்தாங்கிப்பிடித்து, தாழாட்டினாள்!!!
யாரென புரியாது பயத்தோடு கேட்டேன்!!!
அழுதுக்கொண்டே முற்றிலும் மறைந்தாள்!!!
அவள் இருக்கும்வரை வலியில் அழுதநான்!!!
அவளை இழந்தப்பின்பு, அவ்வலிக்காக ஏங்கி நிற்கிறேன்!!!

எழுதியவர் : கவிஞன் உளி (20-Feb-16, 9:15 pm)
பார்வை : 131

மேலே