கைக்குட்டை
தேர்வறையில்
எனது பேனாவை வாங்கி
எழுதி கொண்டிருந்தாள்
தெரிந்த கேள்விகளுக்கு
பதிலளித்து விட்டு
தெரியாத கேள்விகளைப் பார்த்து
முட்ட முட்டாய் விழித்துக் கொண்டு
பேனாவை வாயில் கடித்து
யோசித்து கொண்டிருப்பதை
நான் பார்த்ததும்
பார்த்துவிட்டு
கைக்குட்டையால் பேனாவை
துடைக்கிறாள்
எப்படியாவது
அவளிடமிருந்து வாங்கிவிடலாம்
பேனாவை,
எப்படி
வாங்குவது
கைக்குட்டையை?