அய்யம் பெருமாள் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : அய்யம் பெருமாள் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 10-Sep-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 21 |
கவிதைகளால் காலம் கடக்க போராடும் போராளி இவன் கவிஞன் உளி!!!
என்னில் ஏதோ ஒன்றை தொலைத்த நேரம் என்னுள் நுழைந்தவள்!!!
நான் விழித்த நேரம் என்னில் முற்றிலும் பரவியிருந்தாள்!!!
இழுத்தெறிந்தேன்!!!
என் இதயம் கிழித்தாள்!!!
அறுக்க எண்ணினால், என்னை துளைத்துக் கொண்டிருந்தாள்!!!
கதறி அழுதேன்!!!
ஆனால் அவள் அழகாய் சிரித்தாள்!!!
ஓடிச்சென்றால் என் கால்கள் கட்டிக்கொண்டாள்!!!
தவழ நினைத்தால் என் நிழலலையும் நெருங்கவிட மறுத்தாள்!!!
வழியின்றி மயங்கி விழுந்தேன்!!!
தாவித்தாங்கிப்பிடித்து, தாழாட்டினாள்!!!
யாரென புரியாது பயத்தோடு கேட்டேன்!!!
அழுதுக்கொண்டே முற்றிலும் மறைந்தாள்!!!
அவள் இருக்கும்வரை வலியில் அழுதநான்!!!
அவளை இழந்தப்பின்பு, அவ்வலிக்காக ஏங்கி நிற்கிறேன்!!
தனிமையைத் தேடி!!!
கடற்கரை சென்றேன்!!!
அலைகள் அரவனைத்தன!!!
காடுகள் சென்றேன்!!!
பறவைகள் நலம் விசாரித்தன!!!
மண்ணை பார்தேன்!!!
விதைகள் கைக்கொடுத்தன!!!
விண்ணை பார்த்தேன்!!!
நட்சத்திரங்கள் கண் இமைத்தன!!!
தினம் பச்சிலங்குழந்தைகள் தத்தித்தவழ்கின்றன!!!
தளிரெனும் பெயரோடு செடிகளில்!!!
எப்படி சொல்லிட முடியும் நம் உலகை???
வெறும் அழகென ஒற்றைப்பதத்தில்!!!
வெற்றிடமாய் பரவிய எனக்குள்!!!
ஓராயிரம் சிந்தனைகளை உலாவ விட்டுவிட்டாள்!!!
அமைதியை தேடினேன், அவள் கயல் கண்கள் அனுப்பிவைத்தாள்!!!
வானத்து நிலவினை தேடிய எனக்குள், அவள் நினைவுகளை பறக்கவிட்டாள்!!!
தென்றலுக்கு காத்துக்கிடந்தால்,
அவள் சுவாசம் மட்டும் அனுப்பி வைத்தாள்!!!
காதல் குழிக்குள் தத்தளித்தேன்,
இன்னும் ஆழ் செல்ல அவள் கார்கூந்தல் அனுப்பி வைத்தாள்!!!
கவலையெல்லாம் நான் மறக்க, பாதக்கொலுசினில் இசைஇசைத்தாள்!!!
இப்பூமி பந்தில் நான் வாழ, அவள் பாதம் தொட்டே சொர்கம் படைத்தாள்!!!
அவள் உண்ட உணவு செறித்திட, என் கைகோர்த்து உலா வந்தாள்!!!
தன் தந்தையிவன் சிரித்தாட தன் உலகம் எங்கும் செப்பனிட்டாள்!!!
வாழ்ந்து வீழும் மனிதனை!!!
வீழ்ந்தும் வாழவைக்கின்றன!!!
மரங்கள்!!!
கைநழுவி
தவறி விழுந்த
நாழிகையில்
தெறிக்குது
கண்ணீர் துளிகள்
#பிரிவு
கொஞ்சம்
கோபமாய்
உறவாடிவிட்டேன்
கிள்ளிவிட்டால் கள்ளி
#குண்டூசி
பல
மலடித்தாய்கள்
இன்று நிறைமாத
கர்பிணிகள்
#அடைமழையில் குளங்கள்
பலர்முகம்
பார்த்துக்கொண்டிருந்த
குளத்தில் நானும் விளிம்பில்
நின்று கொண்டிருந்தேன்
பின்னிருந்த எவனோ
தள்ளிவிட்டான்
பாவி தத்தளித்துகொண்டிருக்கிறேன்
மீளாமல்
#காதல்
பிறவி
குருடு
#சட்டம்
இதன்பின்
வாழ்க்கை
என்னவாகுமோ
ஏதாகுமோ
என்ற அச்சத்திலே
கட்டி கொடுக்கிறார்கள்
#தேர்வு தாள்
அறிவுக்கனியை
நான் பறிக்க
வளைந்து
கொடுக்கும்
ஞான மரங்கள்
#ஆசிரி
செல்ல வழியேயில்லை என அழுவோர்க்கு மத்தியில்!!!
செல்ல தங்களையே வழியாக்கும் சில அற்புதமக்கள்!!!
தியாகிகள்!!!
உனக்கான எல்லா வழிகளும் மூடப்பட்டுவிட்டனவா???
மகிழ்ந்துகொள்!!!
புதுவழிகள் பிறக்க போகின்றன என!!!
நண்பர்கள் (4)

செ செல்வமணி செந்தில்
சென்னை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

பொங்கல் கவிதை போட்டி
தமிழ் தேசியம்

உமா மகேஷ்வரன்
சென்னை
இவர் பின்தொடர்பவர்கள் (4)

பொங்கல் கவிதை போட்டி
தமிழ் தேசியம்

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
