எனக்கான ஒரு தெய்வம்

வெற்றிடமாய் பரவிய எனக்குள்!!!
ஓராயிரம் சிந்தனைகளை உலாவ விட்டுவிட்டாள்!!!
அமைதியை தேடினேன், அவள் கயல் கண்கள் அனுப்பிவைத்தாள்!!!
வானத்து நிலவினை தேடிய எனக்குள், அவள் நினைவுகளை பறக்கவிட்டாள்!!!
தென்றலுக்கு காத்துக்கிடந்தால்,
அவள் சுவாசம் மட்டும் அனுப்பி வைத்தாள்!!!
காதல் குழிக்குள் தத்தளித்தேன்,
இன்னும் ஆழ் செல்ல அவள் கார்கூந்தல் அனுப்பி வைத்தாள்!!!
கவலையெல்லாம் நான் மறக்க, பாதக்கொலுசினில் இசைஇசைத்தாள்!!!
இப்பூமி பந்தில் நான் வாழ, அவள் பாதம் தொட்டே சொர்கம் படைத்தாள்!!!
அவள் உண்ட உணவு செறித்திட, என் கைகோர்த்து உலா வந்தாள்!!!
தன் தந்தையிவன் சிரித்தாட தன் உலகம் எங்கும் செப்பனிட்டாள்!!!