பயணம்
தனிமையில் தவிக்கும் நிலவிற்கு துணையாய்...
நானும் விழித்திருக்கிறேன்..
உன் நினைவுகளோடு ...!
ஐன்னலோர இருக்கையில்
எனை நனைக்கும் காற்றில் ...
உந்தன் சுவாசம் தேடியபடி ...
என் இரவு நேர பயணம்...
விடியலை நோக்கி...!
. - கீதா பரமன்