வட மொழி

இந்தியா முழுவதும் மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. மற்றும் அய்.சி.எஸ்.இ. போன்ற கல்விக் கூடங்களில் வரும் கல்வியாண்டு முதல் (2016-2017), சமஸ்கிருதம் மூன்றாம் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்திருக்கிறார் கள். அப்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, "ஆங்கில மொழி மற்றும் மாநில மொழிகள் (தாய்மொழி) மாணவர்களுக்குத் தேவையாக இருப்பினும் நமது பரந்துபட்ட கலாச்சாரத்தைக் கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதம் முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும்.

தற்போது மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இருமொழிப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 3ஆவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். ஆகவே வரும் கல்வியாண்டு முதல் (2016-2017) மத்திய அரசின் கீழ் வரும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கட்டாயப் பாடமாக சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்படும். மேலும் வரும் ஆண்டுகளில் 8ஆம் வகுப்புக்கு மேல் 12ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத கல்வியைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித் திருக்கிறார்.
.உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு குறித்து ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பேட்டியளித்த போது இதே கருத்தினைத் திரும்பவும் கூறியதோடு, மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சமஸ்கிருத மொழி நுhல்களும் விரைவில் அச்சிடப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படவுள்ளன

எழுதியவர் : (22-Feb-16, 12:41 am)
பார்வை : 73

மேலே