என் உயிர் தோழன்

துக்கம் எனும் போது
என் கண்ணீரை
துடைப்பவனாய்...

மகிழ்ச்சி என்றதும்
என் சந்தோஷத்தில்
பங்கெடுப்பவனாய்...

துவண்டு விழும் போது
தோள் கொடுப்பவனாய்...

முடங்கிக் கிடக்கும் போது
தைரியம் ஊட்டுபவனாய்...

வெற்றி பெற்ற போது
என்னை பாராட்டுபவனாய்....

தோல்வி அடைந்த போது
என்னை வெற்றி பெற
உற்சாகப்படுத்துபவனாய்...

எப்பொழுதும்
என்னை நல்வழியில்
நடத்துபவனாய்...

என்றும்
என்னுடன் இருக்கும்
என் உயிர் தோழனே....
அருணாச்சலா...!
- அருணாச்சலன் என் தோழன்

எழுதியவர் : நித்யஸ்ரீ (21-Feb-16, 11:50 pm)
Tanglish : en uyir thozhan
பார்வை : 1508

மேலே