அரசியல் ‘நாகரிகத்தை’ மெய்ன்டெயின் பண்றாராம்’’

‘‘கொஞ்ச நாளாவே தலைவர் டி-ஷர்ட், ஜீன்ஸ்னு
கலக்கறாரே… என்ன விஷயம்?’’

‘‘அரசியல் ‘நாகரிகத்தை’ மெய்ன்டெயின்
பண்றாராம்..!’’

—————————————

‘‘ஓப்பன் பண்ணினா சத்யம் தியேட்டர்…’’

‘‘சினிமா தியேட்டரைப் பத்தின கதையா சார்..?’’

‘‘ம்ஹும்… இப்ப அங்க ஓடிட்டு இருக்கிற ஒரு இங்கிலீஷ்
படத்தோட கதைய்யா!’’

————————————-

‘‘ரொம்ப நாளா தீராத ஒற்றைத் தலைவலியால அவதிப்
பட்டுக்கிட்டு இருந்தேன்… இப்ப கொஞ்ச நாளா கடுமையான
இரட்டைத் தலைவலி!’’

‘‘உங்களை யாரு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கச்
சொன்னா தலைவரே..?’’

– கே.லக்ஷ்மணன்,
—————————————–
-
‘‘என்ன தலைவரே… போலீஸ் நாய் உங்களைப் பார்த்து
வாலாட்டுது. இந்த நாயை உங்களுக்கு முன்பே தெரியுமா?’’
-
‘‘ம்… முதன்முதலா திருடும்போது என்னைக் கவ்விப் பிடிச்சதே
இதுதான்யா!’’
-
– பெ.பாண்டியன்,
-
----------------------------------------
-
‘‘படத்துல ஹீரோ அடிக்கடி சாப்பிட்டுக்கிட்டே வசனம்
பேசறார்…’’
-
‘‘அப்ப ‘லஞ்ச் டயலாக்’னு சொல்லுங்க..!’’
-
– வி.சாரதி டேச்சு,
-
--------------------------------

எழுதியவர் : (22-Feb-16, 2:33 am)
பார்வை : 84

சிறந்த நகைச்சுவைகள்

மேலே