உங்க இளைய எங்கெ போயிட்டான்
உங்க இளைய எங்கெ போயிட்டான்?
==
தம்பி எங்க வீட்டில இளையவும் இல்ல பழையவும் இல
==
உங்க பையனைதாங்க கேட்டேன்.
==
நீ உங்க இளைய எங்கேன்னு தானே கேட்ட.
==
ஆமாங்க நான் உங்க இளைய எங்கேன்னு தான் இப்பவும் கேக்கறேன்.
==
என்னய்யா கொழப்பற?
==
நா ஒண்ணும் கொழப்பீங்களா? உங்க பையம் பேரு தான் குழப்பத்துக்குக் காரணம். நீங்க இந்திப் பெயர் மோகத்திலே உங்க பையனுக்கு பாலா (Bala)-ன்னு பேரு வச்சிட்டீங்க. அதுக்கு அர்த்தம் தெரியுமுங்களா?
==
யோவ் ஏதோ எங்களுக்கு பாலா –ன்னு சொல்லப் பிடிச்சிருந்தது. வச்சுட்டோம். அதுக்கு அர்த்தமெல்லாம் யாருக்கய்யா தெரியும்?
==
சரி நாஞ் சொல்லறங்க. இந்திலே பாலா –ன்னா இளைய,-ன்னு அர்த்தம். அது ஒரு உரிச்சொல் (Adjective) பெயர்ச் சொல் அல்ல.
==
அப்படியா தம்பி இது எங்களுக்குத் தெரியாம போச்சே.
==
இனியாவது அவனுக்கு நல்ல தமிழ்ப் பேரா வையுங்க.
==
சரி தம்பி. ரொம்ப நன்றி.
============
BALA (बाला) = Young
============
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
