இதயத்தின் மீள்பிறப்பு --முஹம்மத் ஸர்பான்

காட்டுக்குயில்களும் காலுடைந்து போனது.
பச்சைக்கிளிகளும் சிறகொடிந்து போனது.
வண்ணத்துப் பூச்சிகளும் உடையின்றி நிர்வாணமானது.
பாசி பூத்த குளத்தில் பாவையவள் குளிக்கும் நேரம்...,
***
பகலவன் ஒளியும் சற்று குறைந்து போனது.
தோட்டத்து மாங்கனியும் மெல்லச்சிவந்து போனது.
என் வீட்டு ரோஜாக்களும் தலைகுனிந்து பார்த்தது.
மார்கழியில் குளிரும் தேகம் மாசியில் மஞ்சளால் மனத்திட..,
***
தென்றலும் மலை மீது மோதிப் போனது
தென்னங்கள்ளும் நிலைதவறி இளநீராய் போனது.
கவரிமான்களும் சிங்கத்திடம் காதல்கவிதை சொன்னது.
பிறை நிலா மங்கை மேல் செங்கமலம் மோதிட..,
***
பட்டை மரத்திலும் இலைகள் வளர்ந்து போனது.
காட்டு மூங்கில் புல்லாங்குழல் உடைந்து போனது.
உலகத்தின் இயக்கமும் சில வினாடிகள் தடைப்பட்டது.
அவள் தேக நாணத்தை தாவணிகள் மாற்றுகையில்
***
வெண்ணிலவும் முகம் சலித்து போனது.
வண்டுகளும் தூர தேசத்தில் இருப்பிடம் தேடி போனது.
கள்ளிச் செடியும் ரசனை வந்ததால் பால் வடிந்தது.
என் இதயம் அவள் பின்னால் அலைந்து திரிகையில்...,
***
கனவின் வெட்டவெளியில் இடிமின்னல் வந்து போனது.
கண்களை கண்ணீர் கழுவி நினைவுகள் வறண்டு போனது.
மைனாக்களிடம் பேசிப்பேசி ஆயுளும் முடிகிறது.
மின்னல் பந்தலில் சிக்குண்ட என்னிதயம் அவளால் மீளப்பிறந்தது.
***

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (22-Feb-16, 1:35 pm)
பார்வை : 121

மேலே