முத்தம்-1

உன் உதடுகள்
வரைந்த
ஓவியம்....
முத்தம்...
என் கன்னத்தில்...

=======================

உன் வில்இதழ்கள்
ஏவிய ....
முத்த அம்புகள்...
சிவந்த என் கன்னம்....

=============

நீ
உதட்டு சாயத்திற்கு
ஒத்திகை பார்த்திட...
வெற்று தாளோ
என் முகம்
வண்ண வண்ண முத்தங்கள்....

==================

என் முகத்தில்
கனிந்த.....
கோவை பழங்கள் ....
உன் உதடு அச்சு....
முத்தம்......

=================

என் திராணி
ஜொலிக்கும்
நெற்றிக்கும்......

கவி பேசும்
கண்களுக்கும்...

கம்பளம்
விரித்து
காத்திருக்கும்
கன்னங்களுக்கும் ....

தேனியாய் உறிஞ்சிடும்
உதடுகளுக்கும்.......

நெடுங்கால யுத்தம்....

உன் இதழ் முத்தம்
அதிகம் சுவைப்பது
யாரென்று.....

சமதர்மம் காத்திட்ட
முத்த அரசி நீ.....

===============

எழுதியவர் : மா.யுவராஜ் (22-Feb-16, 5:55 pm)
சேர்த்தது : யுவராஜ்மா
பார்வை : 163

மேலே