கானலின் வீதியில்

எழுதப்படாத நாட்குறிப்பின்
பக்கங்களைப்போல்
வெறுமையாய்க் கிடக்கும்
சொல்லப்படாத நம் காதலின்
மௌனக் காயத்திற்கு
ஞாபகங்கள் மயிலிறகால்
களிம்பு பூசி .
கண்ணீரால் கழுவிக்கொள்கிறது.
வாழ்க்கை இன்னும் கனவுகளின்
கைப்பிடித்துக் கானலின் வீதியில்...!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (25-Feb-16, 2:08 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 86

மேலே