விழுதுகள் ----- ஹைக்கூக்கள்
குடும்பம் தழைக்க
ஒதுங்கி வழிவிட்டது ஆலமரம்
----- விழுதுகள் .
வெட்டப்பட்டது விழுதுகள்
காமத்தில் காதலர்கள்
----- அனாதைக் குழந்தை
சந்ததியைத் தாங்கும் விழுதுகள்
சமுதாயத்தின் வேர்கள்
----- பஞ்சாயத்து மேடை .
மழைக்காக மரம் வளர்ப்போம்
மண்ணில் சாயும் விழுதுகள்
----- பொதுநலம் .
குடும்பத்தில் சண்டை
வேதனையில் கண்ணீரோடு விழுதுகள்
------ முதியோர் இல்லம் .