கிணற்றுத் தவளைகள்

கிணற்றுக்குள் இன்னும் தவளைகள்
கிடக்கின்றன.
கத்திக் கத்தித் தொண்டை வறண்டு
கிடக்கின்றன.
தாகம் தீர்த்துக் கொள்ளத் தெரியாமல்
கிடக்கின்றன.
மேலே இருந்து பார்ப்பவரை
அண்ணாந்து பார்த்து , துள்ளிக் குதித்துக்
கிடக்கின்றன.

மேலே இருந்து பார்த்ததே போதும்,
அதுவே தாம்செய்த பாக்கியம் என்று
ஆனந்தக் கூத்தாடி , களி பேருவகையில்
கிடக்கின்றன.

தாகம் மறந்து , பசி மறந்து , மொத்தத்தில்
தமைமறந்து,
கிடக்கின்றன.

மேலே இருப்பவர் , சீக்கிரம்
நீங்கள் மேலே வந்து விடலாம் என்று
ஆசிர்வதிக்கிறார்.
மேலே வர விடுவேனா ? என்று
மனப்பல் கடிக்கின்றார்.

தவளைகள் கவலைகள் மறந்தல்ல
கவலைகள் அறியாமல்
கிடக்கின்றன.

கிணற்றுக்குள் இன்னும் தவளைகள்
கிடக்கின்றன.

எழுதியவர் : கனவுதாசன் (26-Feb-16, 11:10 am)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 77

மேலே