உன்னை ஒருமுறை பார்க்க வேண்டும் மணகோலத்தில் 555
என்னவளே...
நீயும் நானும் சந்தித்த அந்த முதல்நாள்
உனக்கு நினைவிருக்கிறதா...
நம்மை தாண்டி சென்ற புது
தம்பதிகளை கண்டு நீ சொன்னாய்...
நாளை நாமும் இப்படிதானே
வருவோம் என்றாய்...
அந்த நிமிடம் முதல் நாம்
காதலர்கள் இல்லை...
நாம் தம்பதிகள்
என்று வாழ்ந்தேன்...
காரணம் என்னிடம் சொல்லாமலே
நீ விழிகளில் கண்ணீர்மாலை சூடினாய்...
எனக்கு விடை தெரியாமல் நீ
விலகினாய் என்னைவிட்டு...
நீதான் என் துணைவியென்று
வாழ்ந்த என்னை...
உன் திருமணத்திற்கு
என்னை அழைக்கிறாய்...
என்னவள் கழுத்தில் வேறொருவர்
மாலை சூடுவதை பார்க்கவா...
இல்லை மாலை சூடும்வேளை நான்
மண்ணில் சரிவதை பார்க்கவா...
இதற்காவது விடைசொல்
நான் வருகிறேன்...
உன்னை ஒருமுறை
மணகோலத்தில் பார்க்க.....
[படம் தவறான எண்ணத்தில் பதியவில்லை]