காமராசா - மீண்டும் பிறந்து வருவாயா

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
இந்தியாவுக்காக உயிர் கொடுத்தவன் நீ

நன்றிக்ககடனாக நாங்கள் உன்னை
சொந்த ஊரில் மண்ணைக் கவ்வச்செய்தோம்

அன்றே தமிழனின் புத்தி அறிந்து தான் நீ
கிங் மேக்கர் ஆகி விட்டாயோ?

தமிழன் நம்மை பிரதமர் பதவியில் வைக்க அவனுக்கு மனதுவராது என்று
அன்றே யூகித்தாய்..

நாய் என பதவியை தூக்கி எறிந்தாய்
நன்றியாக இந்திராவை அமரவைத்தாய்
அவள் உன்னை வீட்டுச் சிறையில் வைத்தாள்

உனக்கு தமிழ் மக்கள் துரோகம் செய்ததாலோ? என்னோமோ
இன்னும் எங்கள் தலை நிமிரவே இல்லை

மீண்டும் பிறந்து வருவாயா என் ராசா
என் உயிர் ரோசா

எழுதியவர் : கார்த்திகா சு (29-Feb-16, 8:04 pm)
பார்வை : 213

மேலே