ஒரு வேசியின் இரவு
வேசி ஒருத்தி
வீதியில் காத்திருக்கிறாள்
யாரும் வரவில்லை
இரவு நகர்ந்து கொண்டிருக்கிறது
இன்னும் ஒருத்தன் கூட வரவில்லை !
இன்று ஊரில் கூடா விரதமா
என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் !
இரவு கடந்து நிசி கடந்து
நெடு நேரமாகிவிட்டது
அவள் தூங்கவில்லை
கொட்டாவிகூட விடவில்லை
துயிலாத இரவுகள் அவளுக்கு பழக்கமானவை !
யாருமே வரவில்லை !
இதோ கீழ்வானம் சிவந்து விட்டது
ஒப்பனை கலையா அழகுடன்
அவள் தன் இருப்பிடத்தை அடைந்து
படுக்கையில் விழுந்தாள்
உடனே உறங்கிப் போனாள்
நன்றாக விடிந்து விட்டது
இரவுதான் இவளின் விடியல் !
~~~கல்பனா பாரதி~~~