ஏதும் இல்லை

வந்ததும் இருந்ததும்
நம்செயலில்லை...
பிறப்பதும் இறப்பதும்
வாழ்க்கை இல்லை ...
கண்டதும் காண்பதும்
உண்மையில்லை ...
பெற்றதும்கொடுத்ததும்
உன்னதில்லை..
பணமும் பதவியும்
நிலைபதில்லை...
கல்வியும் அறிவும்
அழிவதில்லை...
அழகும் இளமையும்
நிரந்திரமில்லை..
கடந்தபொழுதும் உதிர்த்தசொல்லும்
திரும்புவதில்லை..
இருப்பதும் இறப்பதும்
நம்மிலில்லை..
உதவி பல நீ புரிந்தால்..
மனிதத்தை மனத்தால்
நீ நேசித்தல்
சரித்திரத்தில் இருந்து
என்றும் நீ மறைவதில்லை .....
என்றும் என்றென்றும்...

எழுதியவர் : jeevan (1-Mar-16, 12:22 am)
Tanglish : yethum illai
பார்வை : 106

மேலே