தங்க இடம் தந்தனரோ

கள்ளமில்லா கடல் மீன்கள்
கடல் தாண்டி
கள்ளாமொழி கடற்கரையில்
கரை ஒதுங்கியது—கணிகையரின்
கள்ளவிழிப்பார்வையா? இல்லை
கள்ள வழிக்காட்டியதா?

எதுவானபோதும்
கல்லாமொழி பேசும் மீன்களைக்
கண்ட கடலோர தமிழ்மக்கள்
வந்தாரை வரவேற்று பண்போடு
வாழ்வளிக்க எண்ணி
தங்க இடம் தந்தனரோ!

எழுதியவர் : கோ. கணபதி. (2-Mar-16, 8:38 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 58

சிறந்த கவிதைகள்

மேலே