thaanam
மழை முகம் காணா பயிராய்
தாய் முகம் காண தவிக்கும் பிள்ளையாய்
ஒளியைக் காண ஏங்கும் உயிர்களுக்கு
விழியை தானம் செய்து உறங்குவோம்
இருளில் ஒளிதரும் நிலவாய்
இன்னொரு உயிர்க்கு ஒளியாய்
இரக்கம் கொண்ட இதயமாய்
இறந்த பின்பும் வாழ்வோம்
விழியிழந்த மனிதர்களின்
வலியுணர்ந்த நெஞ்சங்களாய்
கருணை கொண்டு உதவுங்கள்
கண் தானம் செய்யுங்கள்.