ஒரு தலைக்காதல்
உன்னை பார்த்த முதல் நாளில் எனக்கு தோன்றவில்லை..
எனக்கானவள் நீ என்று..
பிறகு அறிந்து கொண்டேன்..
என் ஜீவன் நீதானே..
அன்று முதல் ..
உனை நான் பின் தொடரவில்லை; நீ தான் என்னை
அழைத்து செல்கிறாய் காதல் கயிற்றில் கட்டி..
கொலுசின் சத்தம் எங்கு கேட்டாலும் உடனே
கண்கள் தேடுகிறது உன் தாமரை பாதங்களை..
எப்போதும் உன்னை பின் தொடரவே விரும்புகிறேன்..
உன் நிழலாவது என்னை தொடட்டும் விடு..
உன்னுள் நான் இல்லை என்கிறாய்..
உனக்குள் செல்கிறதடி என் சுவாசம்;உன் மூச்சுக்காற்றாக..
கோவிலில் நீ வைத்து விட்டு போன திருநீறும்
என்னுடன் தான் இருக்கிறது பொக்கிஷமாக..
உன்னை காணாத நாட்களின் இரவுகளில்
மூட மறுக்கிறது என் இமைகள்..
உன் வீட்டு ரோஜா கூட என்னை பார்த்து தலை அசைக்கிறது..
ஆனால் நீ என்னை பார்க்க கூட மறுக்கிறாய்..
மலையின் பாரத்தைக்கூட பொறுக்க முடிந்த எனக்கு
உன் மௌனத்தை பொறுக்க சக்தி இல்லை..
நீ பார்ப்பாய் என்றால் சிலையாக கூட மாற
தயாராக இருக்கிறேன்..
நீ என்னை பார்ப்பாயே.. அது போதும் எனக்கு..
நிலவே நீ இல்லாத என் வாழ்க்கை முழுதும்
கருப்பு வர்ணம் பூசுகிறது..
வசந்தமே நீ வராத என் காலங்கள் எல்லாம்
இலையுதிர் காலமே..
என்னை ஏற்றுக்கொள்..என் காலம் முடிவதற்குள்..
இல்லை என்றால்..
என் காதலும் ஆகிவிடும்..
ஒருதலைக்காதலாக..