தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து25---ப்ரியா

கவலையுடன் இருந்த ரியா இந்த பக்கத்து வீட்டு அம்மா(வசந்தின் சித்தி)வின் பேச்சால் மிகவும் ஆறுதல் அடைந்தாள்,அந்த அம்மாவிடம் விடைப்பெற்று வீட்டிற்கு சென்றாள் ரியா........மாடியில் துணி காயவைக்கும் சமயம் அவள் வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது யாரென்று எட்டி பார்த்தவளுக்கும் இன்ப அதிர்ச்சி விஜய் மற்றும் கீது ஜோடியாக வந்து இறங்கினர் இருவரது முகத்திலும் கல்யாணக்களை தெரிந்தது சந்தோஷமாய் ஓடி வந்தாள் ரியா.........

ஆனால் வெளியில் வந்த பிறகுதான் கண்டுபிடித்தாள் விஜயின் காலில் உள்ள அந்த காயத்தை....விஜய் திருவிழா முடிந்ததும் காரில் வெளியூருக்கு சென்றுகொண்டிருக்கும் போது ஒரு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமல்ல ஜாதகப்படி 2மாதம் கழித்துதான் திருமணம் நடத்தவேண்டும் என்று கூறிவிட்டனர் அதனால்தான் இவ்ளோ நாள் உன்னைப்பார்க்க வரமுடியவில்லை என்றும் சொல்லி வருத்தப்பட்டாள் கீது!

சரி பரவாயில்ல இப்போ எப்டி இருக்குது என்று நலம் விசாரித்துக்கொண்டாள் திருமணப்பத்திரிக்கையை எடுத்து நீட்டினார்கள்....இருவரும் கண்டிப்பாக நீ வரணும் வசந்த் கிட்டயும் கம்பெனில போய் பார்த்து சொல்றோம் நிச்சயம் இரண்டு பேரும் சேர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னே வரணும் என்று சொன்னார்கள்.

சரி என்பது போல் தலையசைத்தாள் திருமணத்திற்கு இன்னும் 45 நாட்கள் இருக்கின்றது முதல் பத்திரிகை உனக்குத்தான் நீ வரலன்னா பாரு அப்புறம் இருக்குது என்று செல்லமாய் மிரட்டினாள் கீது............சரி சரி கண்டிப்பா வரலாம் என்று நம்பிக்கையாய் சொன்னாள் ரியா........!

கிளம்பும் சமயம் நினைவு வந்தவளாய் பக்கத்தில் வந்து வசந்த் உன்ன நல்லா பார்துக்கிறானா?என்று கேட்டாள் அதற்கும் மௌனமாய் ம்....என தலையசைத்தாள் ரியா.......கழுத்தை பார்த்தவள் புரியுதுடி என்று தலையை தடவி விட்டு எல்லாம் நல்லபடியாய் நடக்கும் மேல இருக்கிறவன் சோதித்து பார்க்கிறான் கவலைபடாத ரியா...! என்று சொல்லி முத்தத்தோடு தன் அன்பையும் வெளிப்படுத்திக்கொண்டு கிளம்பினாள்,

இருவரும் வசந்தைப்பார்க்க ப்றப்பட்டனர்.........

கீது சென்ற பாதையையே பார்த்துக்கொண்டிருந்தாள் ரியா.......பின் உள்ளே வந்து வசந்தின் அறைக்கு சென்று அவனது பழைய புத்தகங்கள் மற்றும் குறிப்புகளை புரட்டிப்படித்துக்கொண்டிருந்தாள் அதிலிருந்து சிறு சிறு குறிப்புளாக எடுத்து தனது டயரியில் குறித்துக்கொண்டாள் 4மணிநேரம் இருந்த இடத்தை விட்டு எழும்பாமல் மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டிருந்தாள்......ஏற்கனவே இவளது படிப்பும் இதற்கு தொடர்பானதாக இருந்ததால் புரிவதற்கு கொஞ்சம் எளிதாக இருந்தாலும்....அதில் இதுவரை தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாததால் மிக சிரமப்பட்டு படித்துக்கொண்டிருந்தாள்.

அவன் வருவதற்குள் அவனுக்குத்தெரியாதபடி புத்தகங்களை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு ஒன்றும் புரியாதவள் போல் தனது வேலையில் கவனத்தைச்செலுத்திக்கொண்டிருந்தாள்.......டயரி எழுதும் பழக்கமுள்ளதால் நேரம் கிடைக்கும்போது அதையும் எழுதிக்கொள்வாள்...

வசந்த் வந்ததும் அவனது கையிலிருந்த திருமண அழைப்பிதழை பார்த்ததுமே கீது அவனைப்பார்த்திருக்கிறாள் என்பதை உறுதிபடுத்திக்கொண்டாள் ஆனால் எதுவும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவனுக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தாள்.ஆனால் இன்று இவன் போதையில் இல்லை......

பூஜையறைக்குள் போனவளுக்கு ஒரு யோசனை தோன்றியது என்னதான் இருந்தாலும் நியாயமாக தெய்வத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு தானே தாலிக்கட்டினான் அவன் தொடுதலை நாம் ஏன் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கணும் நம் கணவர்தானே அவனுடன் எந்த உறவும் இல்லாதது மாதிரி முரண்டுபிடிக்கத்தேவையே இல்லை அவன் எப்படி நடந்துகொண்டாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்தாள் ரியா....!

அறைக்குள் வந்தவள் அவனது குரலை கேட்டதும் அப்படியே நின்று விட்டாள் "கம்பெனி ரொம்ப நஷ்டத்துல போயிட்டிருக்குடா என்னால எதையும் ஒழுங்காக செய்யமுடியவில்லை இன்னும் கொஞ்ச நாள் இப்படியே போனா பைத்தியம் ஆகி பிச்சை தான் எடுக்கவேண்டி வரும் இந்த நிலைமைல உனக்கு எப்படிடா பேசுவேன்" என்று யாரோ அவனின் நண்பனிடம் போனில் பேசிக்கொண்டிருந்தான்.....????

இவளைப்பார்த்ததும் கட்பண்ணிவிட்டு என்னடி பார்க்குற எல்லாம் உன்னால்தான் நான் இப்படி திண்டாடுறேன் என்று தன் கோவத்தை அவள் கன்னத்தில் அடியாய் வெளிப்படுத்தினான்...............

கண்ணீர்த்துளிகள் பட்டுக்கன்னம் தொட்டு தரையில் பட சிரித்த முகத்தினாலேயே அவனது இந்த துன்புறுத்தலையும் பெரிதுபடுத்தாமல் அவனையே நோக்கிக்கொண்டிருந்தாள் ரியா.....?




தொடரும்....!

எழுதியவர் : ப்ரியா (2-Mar-16, 3:40 pm)
பார்வை : 437

மேலே