தோற்கவில்லை நம் காதல்

தோற்கவில்லை நம் காதல்...

கண்களை மூடிக்கொண்டு
தூக்கத்தை அழைக்கிறேன்
ஆனால் வருவதென்னவோ
நீ தான்....
ஏன் வந்தாய் என்று கேட்டால்
"உன்னை தூங்க வைக்க தான்"
என்று கூறுகிறாய்...நீ
வந்த பின் இனி எங்கு நான் தூங்குவது
உன்னை பற்றியே நினைத்து
கொண்டிருக்கிறேன் தூங்காமலே...

பல நாட்கள் கழித்து எதார்த்தமாய் நிகழ்ந்த சந்திப்பு அது ...

தன் வாழ்க்கையை சந்தோஷமாக, வானவில்லின் சோலையாக மாற்றிக்கொண்டு வலம் வந்து கொண்டிருந்த திவ்யாவுக்கு அந்த சந்திப்பு அதிர்ச்சி மட்டுமல்ல...தாங்க முடியாத வலியையும் தந்தது...அவள் பார்த்தது வேறு யாரையும் அல்ல, இரண்டு வருடங்களுக்கு முன் இவளை வேண்டவே வேண்டாம், இனி நமக்கு செட்டே ஆகாது என்று இவளை உதறி தள்ளிவிட்டு, இவள் உள்ளத்தை உடைத்து போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் போனானே அதே தினேஷை தான்...

ஏனோ தெரியவில்லை இன்று அவள் தான் உலகம், அவள் தான் வாழ்க்கை என்று அவளுக்காக அன்பை மட்டுமே அள்ளி தர மாதவன் இருந்தும் கூட தினேஷை பார்த்த உடன் அவர்களின் கடந்த கால காதல் வாழ்க்கை அவள் கண்முன்னே வந்து போனது...மாதவனை சந்தித்து பத்து மாதங்கள் தான் ஆகிறது, இவளின் முன்னாள் காதல் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும்...ஆனால் அதை அவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை... மாதவன் தான் முதலில் திவ்யாவிடம் ப்ரொபோஸ் செய்தான்...திவ்யாவோ விலகி விலகி போனாலும் அவன் அன்பை அள்ளி அள்ளி கொட்டி கடைசியாக திவ்யாவிடம் இருந்து சம்மதமும் வாங்கிவிட்டான்...

சில மாதங்களில் வீட்டில் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கலாம் என்று கூட இருவரும் முடிவு செய்து விட்டனர்...இத்தனை நாளாக திவ்யாவுக்கு மாதவனை தவிர வேறு யாரை பற்றியும் நினைக்க கூட தோன்றவில்லை, ஆனால் இன்று தினேஷை பார்த்ததும் ஒட்டு மொத்தமாக அவளது மனம் தன் பழைய காதலின் இனிய நினைவுகளில் லயிக்க தொடங்கியது...

"தினேஷ்..."
திவ்யா அவனை அழைக்க மெல்ல திவ்யாவின் பக்கம் வந்தான்.

"என்ன திவ்யா எப்படி இருக்க?" என்று நார்மலாக கேட்டுவிட்டு அவனை பற்றி கூற ஆரம்பித்துவிட்டான்...
"திவ்யா நான் நல்லா இருக்கேன், எனக்கு வீட்ல பொண்ணு பாத்துட்டாங்க, சீக்கிரமே கல்யாணம் ஆக போகுது...நீ கூட யாரையோ காதலிக்கறதா கேள்விபட்டேன்..சரி திவ்யா, உனக்கு என் கல்யாண இன்விடேஷன் அனுப்பறேன் , நீயும், உன் லவ்வரும் கண்டிப்பா கலந்துக்கணும்...அப்புறம் நீயும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கோ, சரி திவ்யா நான் கிளம்பறேன்...எனக்கு நேரம் ஆச்சு" என்று எல்லாத்தையும் அவனே பேசிவிட்டு திவ்யா பேச ஒரு வாய்ப்பு கூட குடுக்காமல் சென்றுவிட்டான்....

திவ்யா பழைய காதலை எண்ணி சிறிது கலங்கினாலும் தினேஷ் நன்றாக இருக்கிறான், அவனுக்கு நல்ல வாழ்கையும் அமைய போகிறது என்ற சந்தோஷத்தில் மறுபடியும் மாதவனை நினைக்க தொடங்கியது அவள் மனம்...

நீ ஏன் இப்படி சொன்ன, அவகிட்ட சொல்லி இருக்கலாம்ல 'நான் இன்னமும் உன்ன தான் நினச்சிட்டு இருக்கேன், நீ என்ன விட்டு போனதுக்கு அப்புறம் தான் நான் உன்னோட அன்ப புரிஞ்சிக்கிட்டேன்'...
என்ன மனிச்சிருடி, இனி உன்ன நான் பிரியவே மாட்டேன்...நீ இல்லாம என்னால வாழவே முடியாது...நீ என்கூட இருக்கற வரைக்கும் உன் அருமை புரியல, ஆனா நீ இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் மனசு வலிக்குதுனு' இத்தனை நாளா நீ என்கிட்டே புலம்பிக்கிட்டு இருந்த உன்னோட காதல் வலிய அவகிட்ட சொல்லிருக்கலாம்ல, சொல்லிருந்தா அவளும் உன்ன விட்டு போயிருக்க மாட்டா, திரும்பவும் நீங்க ஒன்னு சேந்துருக்கலாமே என்று ஆதங்கத்தில் அவனது மனசாட்சி அவனை கேள்வி கேட்டது...

அவனோ அதுக்கு சின்ன புன்னகையோடு "நான் அவகிட்ட போய், உன்ன என்னால மறக்க முடியல, நீ தான் என் வாழ்கைன்னு சொல்லிருந்தா அவ நிச்சயமா எல்லாத்தையும் தூக்கிபோட்டுட்டு அந்த நிமிஷமே என்கூட வந்துருப்பா, என்ன கட்டிபிடிச்சி அழுதுருப்பா...ஆனா அதுக்கப்புறம் என்ன நடக்கும்னு யோசிச்சு பாத்தியா??...

புதுசா அவளுக்குள்ள வந்துருக்க காதலையும், அவளோட புது காதலனையும் ஏமாத்திட்டோமேனு குற்ற உணர்ச்சில அவ நிம்மதிய தொலச்சி, என்னையும் ஏத்துக்க முடியாம, மாதவன விட்டு பிரியவும் முடியாம தினம் தினம் செத்து செத்து ஒரு வாழ்க்க நடத்துவா...அவ மனசு எனக்கு தெரியும், நான் கஷ்டபட்டா அவளால தாங்க முடியாது... அதுக்காக அவ தன்னோட வாழ்க்கையையே கேள்விகுறி ஆக்கிக்குவா...

அவளுக்கு மாதவன பிடிச்சிருக்கு, அவன் தான் அவளுக்கு பொருத்தமானவன்...அவ அன்ப புரிஞ்சிகிட்டு அவள சந்தோஷமா பாத்துக்கறான்...திவ்யாவ புரிஞ்சிக்காம வேணாம்னு தூக்கி எறிஞ்சிட்டு அவ கதற கதற கண்டுக்காம நீ இல்லனா எனக்கு வேற ஒருத்தி கிடைப்பான்னு அலட்சியமா சொன்னது நான் தான்... என்ன வாழவிடாம என் வாழ்க்கைய கெடுக்கனும்னு நீ நினச்சா இதுக்கு மேலயும் என் பின்னாடி நீ வானு அவ செண்டிமெண்ட் வச்சி தான் அவள என் வழியில வராம பண்ணேன்... ஆனா அவளோ என்ன நினச்சி எவ்ளோ கஷ்டபட்ருப்பா..எத்தன நாள் அழுதுருப்பா...இப்படி தப்புலாம் நான் பண்ணிட்டு அவள தண்டிக்கிறது நியாயம் இல்லையே...

இப்போ தான் அவளோட வாழ்க்கை சந்தோஷமா போய்கிட்டு இருக்கு, அத நான் போய் கெடுக்கனுமா...அவ எப்படி என்ன உண்மையா காதலிச்சாளோ அதே மாதிரி இப்போ நானும் அவள உண்மையா காதலிக்கிறேன்...'கல்யாணம் பண்ணி கட்டில் சுகத்த அனுபவிச்சி பிள்ளைங்கள பெத்துகிட்டு, கடைசிவரைக்கும் நீ இல்லாம நான் இல்ல, நான் இல்லாம நீ இல்லன்னு' காதல் வசனம் பேசிக்கிறது மட்டும் உண்மையான காதல் இல்ல, நான் நல்லா இருக்கணும்னு அவ என்ன விட்டு பிரிஞ்சி போனதும் , அதே மாதிரி அவ நல்லா இருக்கணும்னு நான் அவள விட்டு பிரிஞ்சி வாழறதும் தான் உண்மையான காதல்...

காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழறவங்க காதல் கூட கொஞ்ச நாள்ல காணாம போக வாய்ப்பு இருக்கு, ஆனா எங்க காதல் அவ மனசுலயும் என் மனசுலயும் வாழ்ந்துட்டு தான் இருக்கும்...நான் நல்லா இருக்கேன்னு நினப்போட அவளும் நல்லா இருப்பா, அவ நல்லா இருக்கான்ற சந்தோஷத்துல நானும் நல்லாவே இருப்பேன்...இப்படியே தாடியோட தேவதாஸ் மாதிரி செத்துபோவேணு நினைக்காத, எனக்காக படைக்கப்பட்ட அன்பான பொண்ண கட்டிக்கிட்டு நானும் சந்தோஷமா இந்த அவசர உலகத்துல வாழ பழகிப்பேன்...என் காதல் வலி காலத்தால மாறிபோகிடும், ஆனா கடைசிவரைக்கும் என் காதல் நினைவுகள் அழியாது...

நான் சொன்னது புரிஞ்சதா என்று தினேஷ் தன் மனசாட்சியிடம் சொன்ன விஷயங்களை கேட்டு அவன் மனம் மட்டுமல்ல என் கண்களுமே கலங்கி விட்டது.. யுவர் காதல் சூப்பர் தல...

எழுதியவர் : இந்திராணி (2-Mar-16, 3:19 pm)
பார்வை : 563

மேலே