அழகான பழக்கம் அது

அழகான பழக்கம் அது....!
ஆம்
அழகான பழக்கம் அது....!
எழுதிய எழுத்துக்களை எல்லாம் வருடிப்
பார்க்கும் பழக்கம் அது....!
ம்ம்ம்ம் தொட்டுப் பார்க்கும் போது
அழகாக துடிக்கின்றன அவை...
என் உணர்வுகளின் ஒட்டுமொத்த உருவம் அவை...!
தொட்டு பார்க்கும் போது பாழாய் போன இதயம்
துடித்து துடித்தே என்னை சாகடித்து விடுகிறது....!
இதற்கு பேசாமல் துடிக்காமல் என்னை
சாகடித்திருக்கலாம்....
உயிர் வாழ
துடிக்கும் இதயம்....!
துடித்து துடித்தே என்
உயிரை உருவி எடுத்து விடுகிறது....!
ம்ம்ம்ம்... தொட்டு பார்க்கும் போது
மூச்சு முட்டிப் போகின்றேன்....!
ஆக்சிஜன் அளவு சீராக இருந்தும்
மூச்சு விட சிரமப் பட்டுப் போகின்றேன்....!