வேப்பிலையை ஓட்டும் பேய்கள்

வேப்பிலையை ஓட்டும் பேய்கள்..!
===================================
குழந்தைகளை ருசிக்கும் காமப் பேய்கள்..
நாட்டினை கெடுக்கும் அரசியல் பேய்கள்
கடமை தவறும் இலஞ்சப் பேய்கள்
வஞ்சப் பேய்கள், வழிப்பறிப் பேய்கள்
இன்னும் என்னவெல்லாமோ பேய்கள்
விரட்டத்தான் வேப்பிலை ஏந்தி
வீதி வீதியாய் ஓடினேன்..
கையிலிருந்த வேப்பிலையைக் காணவில்லை..!!

வேப்பிலை அடிக்கிறேன் என்று
இப்படியாகத்தான்
என் தோட்டத்து வேப்பிலை மரங்கள்
மூன்று காணாமல் போனது..!

இது கடைசி மரம்
இனி வெட்ட மரமில்லை..

உங்கள் வீட்டில்
வேப்ப மரம் இருந்தால் கூறுங்கள்
என் பணியைத் தொடர வேண்டும்
பேய்கள் காணாமல் போகும்வரை..!!

===================================================
(குறிப்பு: "தமிழ்க் கவிதைப் பூங்காவில்"
அளிக்கப்பட படத்திற்கேற்ப எழுதப்பட்ட கவிதை)

எழுதியவர் : சொ.சாந்தி (2-Mar-16, 9:48 pm)
பார்வை : 58

மேலே