நான் இறந்த காலம்

( வேலை பார்க்க வெளிநாடு
சென்றிருந்தவன்,
தன் பழைய காதலியை
கற்பத்தோடு பார்க்க
நேருகிறது!கல்யாணம்
நடந்ததே அவனுக்கு
தெரியவில்லை!
அங்குதான் இந்த வார்த்தைகள்
கவிதையாய் மாறின)


இப்படி உன்னை
பார்க்க நேருமென்றால்
நான் வந்திருக்கவே
மாட்டேன்!பெண்ணே!


நம் ஞாபகங்களை
நான் மீண்டும்
சரிசெய்து மூளைக்குள்
சிறைகொண்டது,
உன்னை இப்படி பார்க்கவா?!


என்ன காரணம் என்றே
தெரியாமல் கண்கள்
தன் கண்ணீரை சொட்டுகிறது பெண்ணே!


கடல் தாண்டி வந்தது ,உன்
கற்பத்தை பார்க்கவா?
கடல் தாண்டி வந்தது,நான்
கண் கலங்கி நிற்கவா?


எத்தனை ஆசைகள்
மனதில் அடக்கிருந்தேன்
தெரியுமா??

ஒரே நொடியில் வீசி
எரிவதென்றால் என்னால்
எப்படி முடியும்??


இதை சொல்லிஇருக்கலாமே!
உன் கல்யாணத்திற்கு
இந்த பழைய காதலனை
அழைக்க மறந்து விட்டாயா?
இல்லை
மறுத்துவிட்டாயா?


உன் குழந்தையை பார்க்கதான்
எனக்கு அழைப்புண்டோ!!

ஓ!!! பெண்ணே!

உன் அழைப்பிற்க்கு பதிலாய்
என் மரணத்திற்க்கு தவறாமல்
உன்னை அழைக்கிறேன் !


அதற்குமுன் ஒரு கேள்வி
!
என் மரணத்திற்க்கு பிறகு
நம் காதல் கதைகளை
உன் குழந்தைக்கு சொல்லி வளர்!

அவனோ(அவளோ)
உன்னை போல் இல்லாமல்
என் போல் பிறரை
காயப்படுத்தாமல் இருப்பதற்கு
கற்றுக்கொள்வார்கள்!!


அதிலும் கேட்கிறாயா??

என்போல் காயத்தோடு
இறந்து விட்டால் என்று??

ஓ!!! பெண்ணே

தமிழ் மொழியில் வார்த்தை
இருந்தால் பதிலை தேடிச்சொல்கிறேன்!
♦♦

எழுதியவர் : (3-Mar-16, 8:47 am)
Tanglish : naan irantha kaalam
பார்வை : 177

மேலே