கல்லுராசு

டேய் கல்லுராசு, எங்கடா போயிட்டே? நானும் அரை மணி நேரமா உன்னக் கூப்புட்டுடே இருக்கறேன். எங்கடா போய்த் தொலஞ்ச?
@
இதோ வந்துட்டேன் பாட்டி. என்னக் கல்லுராசு -ன்னு கூப்படவேண்டாம்னு நா எத்தன தடவை சொல்லறது. எம் பேரு கல்ராஜ். இங்கெ சரியா எம் பேரச் சொல்லுங்க பாக்கலாம்.
@
சரி சொல்லறேன். கல்லுராசு.
@
நீங்க சொன்னது சரி இல்ல பாட்டி. இன்னொரு தடவ சொல்லுங்க.
@
கல்லுராச்சு.
@
போங்க பாட்டி உங்களுக்கு எம் பேரு உங்க வாயில நொழையமாட்டங்குது.
@
ஆமாண்டா உங்கப்பன் கன்னா பின்ன்னு வாயிலே நொழையாத இந்திப் பேர உனக்கு வச்சிருக்கான். அத நா சரியாச் சொல்லும்னா அது நடக்கற காரியமா? அந்தக் கல்லுராச்சுக்கு என்னடா கல்லு அர்த்தம்.
#
அந்தப் பேரோட அர்த்தம் எனக்குப் பேரு வச்ச எங்கப்பாவுக்கும் தெரியாது எனக்கும் நஹி ஹை.
@

ஒரு நல்ல தமிழ்ப் பேரா வைக்கத் துப்பில்லாம ஒரு அர்த்தம் தெரியாத இந்திப் பேரா உனக்கு வச்சு நம்ம பேசற தமிழையும் உன்னையும் கேவலப்படுத்திடாடானே உங்க அப்பன்.
@
சரி விடுங்க பாட்டி. நீங்க எங்கப்பாவைப் பெத்த சொந்த தாய் தானே. அவுரு வீட்டுக்கு வந்த ஒடனே நாலு மொத்து மொத்தி என்னோட இந்திப் பேரத் தூக்கிப் பொட்டுட்டு நல்ல தமிழ்ப் பேரா எனக்கு வைக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்துங்க.
@
சரிடா பேரான்டி கல்லுப் பையா.
################%%%%##
சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிறமொழிப் பெயர் அறிய
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கல் = நாளை/நேற்று
ராஜ் = அரசன், அரசு
#####%%%%%%%%%%%

எழுதியவர் : மலர் (3-Mar-16, 12:02 am)
பார்வை : 185

மேலே