புத்தகமே…

அறிவு நீரூற்று
அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது
அட்டைகளுக்குள்..

எடுத்துக் குடிப்பவரை
ஏமாற்றியதில்லை என்றும்,
ஏற்றித்தான் விடுகிறது
குன்றாய் உயர..

இதனிடம் தலைகுனிந்தால்,
தலைநிமிரலாம் வாழ்வில்..

ஆனால் இன்று அது
அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது
நூலகத்தில்,
எடுத்துப்பார்க்க ஆளின்றி..

கொலுவிருக்கிறது புத்தகக்கடையில்
கூடுதல் விலை மதிப்பில்..

அந்த அறிவு இங்கே
பேரம் பேசப்படுகிறது-
பழைய புத்தகக் கடையில்…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Mar-16, 6:43 am)
பார்வை : 64

மேலே