அ்ச்சமே ஆபத்து கவிதை

*
அன்றைய காதலர்களின்
காதல் கடிதங்கள்
பாதுகாக்கப்பட்டன.
வரலாற்றில் பதியப்பட்டன.
இன்றைய காதலர்கள்
கடிதம் எழுதுவதை மறந்து
எஸ்எம்எஸ்
குறுஞ்செய்திகளில்
பரிமாறிக் கொண்டு
அடுத்த நொடியே
அழகியல் கற்பனை வரிகளை
அழித்துவிட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள்.
சமுகச் சங்கிலியில் சிக்குண்டு
அச்சத்தில் வாழ்வது சாதல்
அச்சமின்றி வாழ்வது காதல்.
*

எழுதியவர் : (3-Mar-16, 7:24 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 128

மேலே