அநேகன்

ரூபமும் நீயே
சொரூபமும் நீயே...

கண்ணும் நீயே
காட்சியும் நீயே...

நதியின் நீர்
கடலில் கலந்தால் என்ன!
மீண்டும் மீண்டும்
பிரவாகம் உண்டு
அதே மண்ணில்...

நான் இறந்தால்
என்ன!
அடுத்து அடுத்து
பிறவி எடுத்து
வருவேன்
உனை சேர்ந்திட...


~~~~~~~

பொன்னும் நீயே
பொருளும் நீயே
மண்ணும் நீயே
மரமும் நீயே
உடலும் நீயே
உயிரும் நீயே
அரசனும் நீயே
சேவகனும் நீயே
~~~~~~~~~~~~~~~

சதுரங்கம் தான்
நம் வாழ்க்கை..
அநேகனே அதில்
ராணி(நான்)
இருக்கும் வரை
ராஜாவை((உங்களை)
என் உயிரை)
உரசி கூட
பார்க்க முடியாது

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-Mar-16, 7:36 am)
பார்வை : 69

மேலே