காதல்

வாசிப்பில் ரசித்த வைரவரிகள்.
*
‘’ காதல் என்பது ஆதிமனிதன் நம்மீது திணித்த இயற்கையான பலவீனம் .”
ஆனால், ஆண்மை நிறைந்த வாலிபன் ஒருவன் ஆவேசமாய் மறுப்புச் சொன்னான்.
“ காதல் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் ஒன்றிணைக்கிறது. ”
துயரம் நிரம்பிய முகத்தோடு பெண் ஒருத்தி கூறினாள்.
“ நரகத்திலிருந்து வெளிவந்த கொடிய நாகம் நமது உடம்பில் செலுத்திய விஷமே காதல்.
பனித்துனி போலத் தூய்மையுள்ள அந்த விஷத்தைத் தாகமுற்ற ஆன்மா மகிழ்வோடு பருகுகிறது.
அதைப் பருகி மயங்கியவர்கள் மெல்ல மெல்ல மடிகிறார்கள்.
“ காதல், குருட்டு அறியாமை, அதனால் இளமை தொடங்குகிறது. பிறகு, முடிந்துபோகிறது. ”
சிரித்தவாறு மற்றொருவன் கூறினான்.
“ காதல் ஒரு தெய்வீக ஞானம்.
அது கடவுளைப் போல இந்த உலகில் உள்ளவற்றையும் மனிதனையும் பார்க்க வைக்கிறது். ”
ஆதாரம் : கலீல் கிப்ரானின் “ தத்துவ தரிசனங்கள் ” – பக்கம் 24 – 25.
தமிழில் ” துறவி.
தகவல் ந.க.துறைவன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Mar-16, 7:11 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : kaadhal
பார்வை : 156

மேலே