ஒற்றுக்கொள்வாயா

*ஆடைகளை துவைத்து
காய வைத்துக் கொண்டிருக்கையில்
பறந்துகொண்டே இருந்த‌
ஆடைகளை பார்த்து
எரிச்சலடைகிறாய்,
இன்றாவது ஒற்றுக்கொள்வாயா?
நீ
துணி காய வைப்பது
நான்
பட்டம்விட்ட கயிற்றிலென்று*

எழுதியவர் : சுகுமார் சூர்யா (4-Mar-16, 2:24 pm)
பார்வை : 72

மேலே