அவள்
செவ்விதழில் பூசிய உதட்டுச் சாயம், என் இதயத்தைக் கரைத்ததென்ன மாயம்,
நிலவினில் இதயம் வைத்த மனிதனானேன்,
உன் அசைவுகளை எல்லாம் கணக்கிட்டக் கணிதனானேன்,
என் காதலுக்குக் காரணங்கள் ஆனவளும் நீயே, என் நிமிடங்களை அலங்கரிக்கும் தோரணங்கள் ஆனவளும் நீயே...!