சாயம் இழந்த குருதியும் வழியுதே

என் இதய தசையின் ஈரங்களை
பிழிந்தெடுக்கும் கரங்கள்...
உன்னை நினைக்கும் கணங்கள்.

உன் விழி விசையின் பாரங்களை
தாங்கிபிடித்த நேரங்கள் - என்
வாழ்நாள் வசந்த காலங்கள்.

சிறு இடைவெளியின் வழியே
வெகுதூரம் சென்றுவிட்டோம்...
விளக்கம் கிடைக்காமலே விலகிவிட்டோம்...

அதுவோ... இதுவோ...
அப்படியா... இப்படியா...
அதுஏன்... இதுஏன்...
நீயா... நானா...
என...
தடம் மாறிய எண்ணங்களால்...
நீர் தடமானது கன்னங்கள்.

காயம் கொண்ட கண்களின் வழியே...
சாயம் இழந்த குருதியும்... வழியுதே...

எழுதியவர் : சாய நதி (4-Mar-16, 11:12 pm)
பார்வை : 98

மேலே