இரவும் இன்னொரு பகலே 2
காதல் கொண்ட ஒருவனின் பார்வையில் இரவு...
______________________________________
தூக்கம் தொலைத்த இரவு
துக்கம் தொலைத்த நினைவுகள்
மிரட்டிடும்
கடிகாரத்தின் "டிக் டிக்" ஓசை
நொடிகளும் இங்கே யுகங்களாகுகிறது....
இந்த யுகத்தினில் இனி 'விடியல்'
என்றொன்று உண்டோ என்று
இயற்கையின் மீதே சந்தேகம் எழுப்புகிறது..
இதயத்தின் துடிப்பு அது
என் காதிலே எதிரொலிக்கிறது..
இமைகளை மூடாமலே கனவு காண
இந்த இரவு கற்றுக்கொடுக்கிறது..
ஏதேதோ நினைவுகள் வந்து எனை குழப்புகிறது...
எல்லாரும் தூங்கிய பின்னும்
இன்னும் பகலாகவே தெரிகிறது..
இந்த இரவு
எனக்குமட்டும்....
______________________________________
~இரவும் இன்னொரு பகலே~
- அரவிந்த்