நட்பிற்க்கு இல்லை ஈடு இணை

குறையொன்று மில்லை
நிறை செல்வத்துடன் நீ பிறக்க....
குடில் ஒட்டை வழியே சூரியனும்
எனை எட்டி பார்த்து நான் பிறக்க....(1)

நீ நடக்கும் முன் தங்க மோதிரம்
நான் போடுவேன் சித்தப்பன் குறல்
எழுப்ப நான் எதுக்கு இருக்கிறேன் நீ
போட என மாமா குரல் செவியடைக்க

அரைஞான் கொடியுண்டோ
நான் சுற்றிக்கொள்ள
யார் இருக்கிறார் அதை எனக்கு
வாங்கிதர..........................................(2)

சொந்தங்கள் அனைத்தும்
உனை சூழ நீ நடந்தது காட்டயில்
பிரலயம் ஒன்றை நான் காணேன்
உனை ரசித்து ஊரார் மெற்ற

நடக்க பலம் இருந்தும்
நடை மறுக்க ,கால்கள் தயங்க
முள்ளும்,கல்லுமாய் வீடு இருப்பின்
என் செய்யும் என் பிச்சு பாதம்.....(3)

அடுத்த தெருவில் பள்ளிக்கூடம்
நடந்தால் கால் நோவும்
என தாய் புலம்ப
செவி கேட்க்கும் வாசலில் மகிழுந்து

இன்னும் ஒரு மயில் தூரம் தான் பள்ளி
விரைவாக நடந்தால் சேரலாம்
அரைகூவல் ஒலிக்கும் முன்
செருப்பிலா பாதம் தரையை முத்தமிட்டபடி.............................,.(4)

பள்ளியை அடைந்தேன்
பாசத்தோடு அரவணைத்தான்
தண்ணீர் கேட்டால்
உணவையே தருகிறான் அவன்

அந்த கதிரவனும் என் நட்பால்
கண் கூசி போனான்
தொடும் தென்றலும் எங்கள்
அரவணைபின் உள் கொண்டு சேரா!
காற்று....

சாதி,மதம்,ஏழை,பணக்காரன்
எனும் வார்த்தைகள் ஊரானுக்கு
மட்டுமே எங்கள் நட்பிற்க்கு இல்லை...

எழுதியவர் : சிவா (6-Mar-16, 9:43 am)
பார்வை : 465

மேலே