நீ மட்டும் நிஜமானால்

யார் யாரோ தாண்டி செல்ல
சலனங்கள் ஏதுமில்லை,
சிலையாக அமர்ந்திட்டேன்...

விழிக்கடையில் நீர் - உன்
விம்பம் விழித்திரையில்
விழும் நாள் வரையில்...

அசைவற்று என் உலகம்
இயக்கம் நிறுத்திவிட்டது,
வேரோடி போய்விட்டேன்...

பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு
சூரியனையும் சுற்றுமாம் - அங்கனமே
என் நிலை - ஆயினும்
இரவு பகல் பேதமில்லை...

வந்துவிடு என்னவே,..
வாழ்வு முழுவதினும் இன்பங்கள்
வந்தெனை சேர்ந்திட
போதும் அந்தோர் நிமிடம்!

உன் நேசத் துளிகள்
சிந்திடும் பார்வைகளில்
நோய்ப்பட்ட என் ஜீவன் நேராகும்...

நீ உச்சரித்திடும்
ஆசை மொழிகளே - என்
ஆறாத ரணங்களுக்கும் மருந்தாகும்...

நீ மட்டும் நிஜமானால்,
காத்திருப்பு சுகம் என்பேன் - காதலின்
இன்ப வேதனை அறிந்த நான்..!!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (6-Mar-16, 1:16 pm)
பார்வை : 821

மேலே