ஹைக்கூ, லிமரைக்கூ, சென்ரியு

ரப்பர் மரம் செதுக்குகிறான்
பால் நிறைய வருகிறது
தோட்டக்காரன் மனநிறைவு.
- ஹைக்கூ

மரம் செதுக்குகிறான்
பால் வழிகிறது
ரப்பர் மரம் அழுகிறது.
- லிமரைக்கூ

குடுவை நிறையப் பால்
ரப்பர் மரங்களின் கண்ணீர்
தோப்பில் மரம் செதுக்கும் பணியாட்கள்.
- சென்ரியு

திரு.ம.ரமேஷின் கவிதைகளும், விளக்கங்களும் வழி காட்டுகின்றன. வலைத்தளங்களும் வெவ்வேறு கவிதை வடிவங்களுக்கும் விளக்கமளிக்கின்றன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Mar-16, 8:23 pm)
பார்வை : 109

மேலே