அலெக்சாண்டரின் இருள் பட்டை
வான் வெளியில் ஏற்படும்
ஈரப்பத நீர்த் திவலைகள் மேலே
கதிரவன் கிரணங்கள் பட்டு
வானவில் பிறந்தது!
அது ஒரு
அழகிய மாயாஜாலம்!
கோடைமழை
வானத்து நீர்த் திவலைகள்
வர்ண ஜால வானவில்!
இயற்கையின் அற்புதம்
ஆனந்தக் களிப்பு!
வானவில் வர்ண ஜாலம்
ஆரத்தின் மேற்புறம் செந்நிறம்
உட்புறம் கருநீல நிறம்!
சிலநேரங்களில்
வானவில்லின் துணையாக
வெளியே மற்றொரு அழகிய இணை
வானவில்!
இணை வானவில்லின்
உட்புறம் செந்நிறம்
மேற்புறம் கருநீலம்!
இரு வானவில்லின்
இடைப்பட்டது
ஒளி குன்றிய பட்டையான பகுதி!
அது ஒரு 'அலெக்சாண்டரின்
இருள் பட்டை'
Ref: Alexander's dark band