காலை வணக்கம்
காலை புலர்ந்தது
என்னவளை எழுப்ப
நானனுப்பும் தூது...
சுமந்து செல்கிறது
கைபேசி...
கைபேசியே..
அவள் காதோரம் சென்று
அளறிவிடாதே...
என்னவள்
திடுக்கிடுவாள்
மிருதுவாய் காரம்நீட்டி
கன்னம் தடவி
இனிதே எழுப்பி சொல்
காலை வணக்கத்தை....