உன் ம் களால் நிறைந்து கொண்டிருக்கின்றன என் சாமக்காடுகள்
உன் நிழல் தேசத்தில்
என் நிழல்... என்ன செய்யும்
அர்த்தப்படும்..அழகாய் படும்.....
-------------------------------------------
நீ வராத நாளில்
வழிபட வழியின்றி தவிக்கிறார்
கடவுள்...
-----------------------------------------------------
நீ கடித்து தின்று விடும்
நட்சத்திரங்கள் நம்
பிள்ளைகளாகி விடுகின்றனர்...
--------------------------------------------------------
காதலின் வரிகளை
நீ அழித்துக் கொண்டே செல்கிறாய்..
எழுதிக் கொண்டே பின் தொடர்கிறேன்
நான்...
------------------------------------------------------------
பூனைகளின் இரவில்
நகங்களின் ஓவியங்களை உன்
சப்தங்களே படைக்கின்றன...
-----------------------------------------------------------
சாமக் காடுகளின்
தூரங்களை குறைத்துக்
கொண்டே வருகிறது உன் கூந்தல்...
------------------------------------------------------------
நீ சேந்தும் கிணற்றில்
நீர் இல்லை
நிலவு...
--------------------------------------------------------
எட்டிப் பார்...
இனி
கள் மழை...
-------------------------------------------------------------
தொடுவானம் உன்
வீட்டிலிருந்தே
தொடங்குகிறது....
------------------------------------------------------
உன் காட்டில் மட்டும்
இன்னும் தடுக்கப்பட்ட
கனிகள்...
-----------------------------------------------------
நீ படித்த பிறகு
மீண்டும் எழுதி விடுகிறேன்
என் கவிதையையே....
--------------------------------------------------------
யூக்ளப்டிக்ஸ் மரங்களினூடாக
நீ நடக்கிறாய்..
வாசம் பிடிக்கிறது மரங்கள்....
-----------------------------------------------------------
சந்தனக் காடுகளை வளர்ப்பதாக
சொன்னார்கள்..
எட்டிப்பார்த்தேன்- உன் காலடிகள்...
-----------------------------------------------------------
கவிஜி