பெண்ணியம் பேசுவர்

அம்மா என்று உனை அழைப்பர் -உனக்கு
அடிமை குணத்தை முளைவிப்பர் -சிலர்
அக்கா வென்று சூளுரைப்பர் -அப்படி
இணங்கச் செய்துதம் இனங்காட்டுவர் -உனை
கற்புக்கரசி யென்று வஞ்சக்கவி பாடுவர்
அவர் இழப்பின் அதை ஆண்மைத்தன மென்பர்
நீ இழப்பின் அதை கீழ்த்தர மென்பர் –இவளென்
இல்லத்தரசி யென்று இச்சகத்தில் கூவுவர் -உன்
இயற்கை கூறுரைத்து இயலாமை கண்துடைப்பர்
மெச்சப் படித்து நல்லறம் காணென்பர் - பின்
மெல்லத்தரம் பிரித்து இல்லறம் பேணென்பர்
பத்தினி என்று கூறி பதிப்பாட வைப்பர் - நீ
படி தாண்டி போயின் பழியென்று உரைப்பர்
பெண் தெய்வம் எனப் போற்றி பெண்ணடிமை தூற்றுவர்
ஆணடிமை பெண் எனப் பறைசாற்றி பெண்ணியம் ஏற்றுவர்


பெண்ணே..
அம்மா,அக்கா,
கற்புக்கரசி,இல்லத்தரசி,
பத்தினி,பெண்தெய்வம்
இவையனைத்தும் இழிச்சொல் ஆக்கிவிடு
பெண்ணடிமை அகராதியில்....
பெண்ணிய அதிகாரத்தில்...
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஆறுமுகப்பெருமாள் (10-Mar-16, 10:16 pm)
சேர்த்தது : ஆறுமுகப்பெருமாள்
பார்வை : 44

மேலே