ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சி
ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சி,
மேலெழும் வெண்பனி
மேகக் கூட்டத்துடன் கலக்கிறது,
அமைதியில்லா என் மனமே!
ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சி,
மேலெழும் வெண்பனி
மேகக் கூட்டத்துடன் கலப்பது
கண் கொள்ளாக் காட்சி!
ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சி,
மேலெழும் வெண்பனி
மேகக் கூட்டத்துடன் கலப்பது
காண ஆயிரம் கண் போதாது!